Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!!!!

காங்கிரஸ் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி  பழைய பேருந்து நிலையம் அருகில் வைத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட் தலைவர் வி. பி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், இதனை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்.பி. பொன்னையன், நகர சபை உறுப்பினர் எஸ். டி .செல்வம், மாவட்ட பொது செயலாளர் உதயகுமார், பழக்கடை குமார், முன்னாள் நகர தலைவர் சைதை சம்பந்தம், நகர நிர்வாகி பிள்ளையார், குருமூர்த்தி, கண்ணமங்கலம், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |