பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்”. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தை இயக்குவதோடு, அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப் பிரபலங்கள் பலர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தன் சமூகவலைதளப்பக்கத்தில், “வாவ்..மிகவும் அருமை. முழுமனதுடன் இத்திரைப்படத்தை எடுத்ததற்காக நடிகர் மாதவன் மற்றும் படக்குழுவினருக்கு ஹாட்ஸ் ஆப். இந்தபடம் உண்மையான தேச பக்தர்களுக்கும் சமர்ப்பணம். சிம்ரன் அவர்கள் சூப்பர். மேலும் நம்பிநாராயணனுக்கு பெரிய சல்யூட். இத்திரைப்படத்தில் சூர்யா சார் கடைசியில் கூறுவதுபோல் எங்களை மன்னித்து விடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இப்பதிவை தன் இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள மாதவன், கார்த்தி சுப்பராஜிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Wow . Thank you so very much bro. We are all very touched and elated. ❤️❤️🙏🚀🚀 https://t.co/HewvXfmg7Z
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 12, 2022