Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களை மட்டும் வர சொல்றாங்க… ஆசிரியர்கள் திடீர் போராட்டம்… திருச்சியில் பரபரப்பு…!!

கல்வி முதன்மை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில் படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் 70 பேர் ‌அந்த பள்ளியில் சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகம் பரவுவதால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அனைத்து சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கும் இதே உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு வாய்மொழியாக பள்ளிக்கு வரவேண்டும் என உத்தரவு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றுபவர்கள் மற்றும் அந்த சங்கத்தின் மாவட்ட தலைவரான சேதுராமன் ஆகியோரின் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் அந்த சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் அரசு உத்தரவு படி பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |