Categories
தேசிய செய்திகள்

எங்களை சும்மா நினைசீங்களா ? அடக்கிய போலீஸ்… பின்வாங்க வைத்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ …..!!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதையடுத்து புதிய வேளாண் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் நலனைக் காப்பதற்காக மூன்று மசோதாக்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தும் மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள், எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நாடு தழுவிய அளவில் நடந்து வரும் போராட்டமானாலும் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று கூடி 30 நாட்கள் தாண்டியும் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் தங்களது டிராக்டரில் ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், உடைமைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். துளி அளவும் பின்வாங்காமல் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட, விவசாயிகள் கோரிக்கையில் தீர்க்கமாக இருந்து வருகின்றனர்.

இதனிடையே பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகின்றது. உத்தரகாண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தின் பாஜ்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் தடுப்பு வைத்து விவசாயிகளை தடுக்க முயன்ற போது விவசாயிகள் டிரக்ட்டரை வைத்து தடுப்பை அப்புறப்படுத்தி போராட்டத்தை கடுமையாக நடத்திக் கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |