Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்…. நடைபெற்ற பேரணி…. கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள்….

கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி பேரணி நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவர்கள் சார்பில்  பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட், பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், துணை தலைவர் திலகவதி செல்வராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன், சி.எஸ். ஐ திருச்சபை ஐசக் கதிர்வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் தங்களை  எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி தூய லூர்தன்னை திருதளத்திலிருந்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் லூர்து நகர், நிர்மலா நகர், போளூர், ஆரணி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |