கிராம மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தை வழங்குமாறு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தெற்கு நத்தம் கிராமத்தில் கூலி தொழிலாளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டம் சரியான முறையில் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் தெற்கு நத்தம் பகுதியில் ஒரத்தநாட்டில் இருந்து வல்லம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுநாதன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது 100 நாள் வேலைத்திட்டத்தை விரைவில் வாங்கித்தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்த பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.