Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு மதுபாட்டில் தருவியா மாட்டியா?…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை பீர் பாட்டிலை கொண்டு சரமாரியாக குத்திய 4  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் பகுதியில்  சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சங்கர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள்  பணம் கொடுக்காமல் சங்கரிடம் மதுபாட்டில் கேட்டுள்ளனர் .

ஆனால்  சங்கர் மது பாட்டில் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் பீர் பாட்டிலை உடைத்து சங்கரை  சரமாரியாக குத்தி விட்டு கடையில் இருந்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |