Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. முகநூல் மூலம் இணைந்த காதல் ஜோடிகள்…. பேச்சுவார்த்தையில் பெற்றோர்….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கிருஷ்பா ஜெப ராணி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி ஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைதனமான முகநூலை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள பழைய சித்துவார் பட்டியை சேர்ந்த ரமேஷ் (22) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் வடமதுரையில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகின்றார்.

முகநூல் மூலம் பழகிய இருவரும் நாளடைவில் செல்போனில் பேசி காதலாக மாறியது. இவர்களின் காதல் பற்றி தகவல் அறிந்த பெற்றோர் இருவரையும் கண்டித்து வந்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்பின் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அதில் பெற்றோர் காதலர்களை ஏற்றுக்கொள்ளவில்லை மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் எனக்கூறி போலீசார் அவர்களை அனுப்பி வைத்திருக்கின்

Categories

Tech |