காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரங்காட்டுகொட்டாய் பகுதியில் எம்.எஸ்.சி பட்டதாரியான சுவேதா(21) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக சுவேதாவும், அதே பகுதியில் வசிக்கும் பரத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுவேதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து புதுமணத் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.