Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு தாங்க…. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜஜினா (23) என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஜஜினாவும், அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் காதலர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கொடுமுடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஜஜினாவை பிரபுவுடன் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |