Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” தலைமை ஆசிரியர் சங்கத்தினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் முதல்வன்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஒழுக்க சீர்கேடுகள் காரணமாக பள்ளிகளில் அசம்பாவிதங்கள் நடப்பதும் அதற்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பொறுப்பாளிகளாக்கப்பட்டு, மாணவர்களாலும், சமூக விரோதிகளாலும் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.எனவே, மாணவர்களை நெறிபடுத்தவும், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் சுப்ரமணியன், மண்டல செயலாளர் மணியரசன், ஆரோக்கியராஜ், மாநில துணை தலைவர் இளவரசன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |