Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு பணம் தர மாட்டீங்க…. செலவ மட்டும் நாங்க பாத்துக்கணுமா….? மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்த காங்கிரஸ் கட்சியினர்….!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நடை பயணம் பாரத் ஜோடோ யாத்ரா என்று அழைக்கப்படுகிறது. ராகுல் காந்தி 3500 கிலோமீட்டர் தூரத்திற்கு 150 நாட்கள் நடந்து செல்ல திட்டமிட்டுள்ளார். இந்தப் பாத யாத்திரைக்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து 6-ம் தேதி விமான மூலம் சென்னைக்கு வருகிறார். அதன்பின் 7-ம் தேதி ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, மதியம் 2 மணி அளவில் கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். இதனையடுத்து கன்னியாகுமரியில் நடைபெறும் மாபெரும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வார்.

கன்னியாகுமரியில் இருந்து 7-ம் தேதி முதல் பாதயாத்திரை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி காலை 4 மணி நேரமும் மாலை 3 மணி நேரமும் நடப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த நடை பயணத்தின் போது ராகுல் காந்திக்கு மாவட்ட தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்க இருக்கும் ராகுல் காந்திக்கு மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளதால், ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் தங்களுடைய மாவட்டத்தில் இருந்து சுமார் 500 நபர்களை தங்களுடைய சொந்தக் காசில் குமரிக்கு அழைத்து வரவேண்டும் என  மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மாவட்ட தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

அதாவது காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இல்லாத காரணத்தினால் முக்கிய புள்ளிகள் மற்றும் வசதியான பார்ட்டிகளை தவிர மற்ற யாரிடமும் பணப்புழக்கம் அவ்வளவாக இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாவட்ட தலைவர்கள் தங்களுடைய சொந்தக் காசில் 500 நபர்களை அழைத்து வந்தால் குறைந்தது 10 லட்ச ரூபாய் வரை செலவாகும். எங்களிடம் பணம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்புகிறார்கள். கட்சியிடம் கோடிக்கணக்கான பணம் இருக்கிறது. இந்த பணத்தை தலைவர்களுக்கு மட்டுமே செலவு செய்கிறார்கள். எங்களுக்கு கொடுப்பதற்கு தயங்குகிறார்கள். இது போன்ற சூழ்நிலைகளில் கட்சி செலவு செய்வதற்கு தயக்கம் காட்டக்கூடாது என மாவட்டத் தலைவர்கள் மேல் இடத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.

Categories

Tech |