Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு டார்ச் லைட்டு தான் வேணும்… அதுக்கு என்ன வேணாலும் பண்ணுவேன்… கமல் ஆவேசம்…!!!

தமிழகத்தில் இந்த தேர்தலில்  சட்டப் போராட்டம் நடத்தியாவது டார்ச்லைட் சின்னத்தை மீட்போம் என கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச்லைட் சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் முறையீடு செய்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் டார்ச்லைட் சின்னத்தில் போட்டி போட்டு இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் சட்டப் போராட்டம் நடத்தியாவது அதே சின்னத்தை மீட்போம் என கமல் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் டார்ச்லைட் சின்னம் கமலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |