பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெட் தேர்வில் வெற்றி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று NET தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் 2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.
இந்த பணியின் நியமனங்களை மேற்கொள்ளும் போது தற்போதுள்ள வயது வரம்பு தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.