திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சவார்த்தையில் தொகுதி பங்கீடு பற்றி ராகுல்காந்தி ஆவேசம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து ஒரு சில கட்சிகளின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் கடந்த பிப்ரவரி 25 அன்று கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் 5 தலைவர்களும், திமுக தரப்பில் மூன்று தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். அப்போது நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் கொடுக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் திமுக 18 தொகுதிகள் கொடுக்க சம்மதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி “தமிழகத்தில் காங்கிரஸ், பாஜாகாவை விட அரசியல் செல்வாக்கு பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும், வெறும் 15, 18 தொகுதிகளில் போட்டியிடவா நான் இத்தனை முறை தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் செய்கிறேன், எங்களுக்கு குறைந்தபட்சம் 41 தொகுதிகள் ஆவது கொடுங்கள்” என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதனால் தொகுதி பங்கீடு குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.