Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“எங்களுக்கு இழப்பீடு தரணும்”… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கென விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையுள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் நேற்று முன்னறிவிப்பின்றி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள பூந்தாழை சாலையிலுள்ள வீடு மற்றும் நிலங்களை பொக்லைன் எந்திரம் வாயிலாக அப்புறப்படுத்த வந்தனர்.

இந்நிலையில் 4 வழிச்சாலை பணிக்காக முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இப்போது குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை அப்புறப்படுத்த வந்த நெடுஞ்சாலைத் துறையினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உரிய இழப்பீடு தராமல் தங்களது நிலங்களை கொடுக்க மாட்டோம் என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பழனிச் சாமி, வசந்தராஜ், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, பொறையாறு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

Categories

Tech |