உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 43 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் அங்கு ஏராளமான உயிர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவ உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. இதற்கிடையில் பெல்ஜியம் தலைநகர் பிரேசிலில் உள்ள நோட்டா அமைப்பின் தலைமையகத்துக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலிபா வருகை புரிந்தார். அங்கு அவர் நோட்டா அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது நோட்டா அமைப்பின் நோக்கம் மிகவும் எளிமையானது அது ஆயுதங்கள் என்பதுதான். எவ்வாறு யுத்தம் புரிவது எவ்வாறு அதில் வெற்றி பெறுவது என எங்களுக்கு தெரியும் நீங்கள் உங்களுக்கு உதவவில்லை என்றால் நாங்கள் பல உயிர் தியாகங்களை புரிந்து வெற்றி பெற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். அதிக அளவிலான ஆயுதங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. விரைவில் புச்சா நகரில் நடந்த அநீதிக்கு தீர்வு காணப்படும் என அவர் கூறினார்.