திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் 2500 க்கும் மேலான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் குறித்து அவருடைய இளம் மனைவி இன்ஸ்டாவில் கவலை தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 ல் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 2,500க்கும் அதிகமான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார். இதனையடுத்து இவர் கடந்த ஜூலை மாதம் தனது காதலியான கன்னிகாவை கமல் தலைமையில் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் சினேகன் திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆன நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனை கருத்தில் கொண்டு அவருடைய இளம் மனைவியான கன்னிகா உன் பிரிவை தாங்க என் நெஞ்சில் தெம்பில்லை என்று இன்ஸ்டாவில் கவலை தெரிவித்துள்ளார்.