கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோடைகாலம் முடிவடைவதற்குள் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.
கனடாவில் கடந்த சனிக்கிழமை வரை சுமார் 77,85,807 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.7 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டிருக்கும் உரையில், “கோடைகால இறுதிக்குள் கனடா மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான பாதையில் செல்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் அரசினுடைய நோக்கம், ஒவ்வொரு குடிமகனுக்கும் செப்டம்பர் மாதம் முடிவடைவதற்குள் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார். மேலும் மார்ச் மாதம் முடிவடைவதற்குள் சுமார் 6 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதையும் தாண்டி சுமார் 9.5 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.