இந்தியா தங்களின் இன்றியமையாத கூட்டாளி என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய குவாட் கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றாகும். மேலும் குவாட் கூட்டமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிராக தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய மட்டும் நடுநிலையாக இருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் கூறியதாவது “அமெரிக்காவும் இந்தியாவும் தங்களுடைய நாடுகளின் நலனுக்காகவும், நன்மைக்காகவும் கூட்டணியாக இருந்து வருகின்றன. மேலும் உலகின் மற்ற நாடுகளை போல் இந்தியாவும் தங்களின் இன்றியமையாத கூட்டாளி தான்” என அவர் தெவித்துள்ளார்.