இந்தியாவிற்கு கொடுத்து உதவும் அளவிற்கு எங்களிடம் போதிய கொரோனா தடுப்பு மருந்து இல்லை என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியா உலக நாடுகளின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி பிரித்தானியா, அமெரிக்கா, பாகிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களால் முடிந்த உதவியை செய்வோம் என்று கூறியிருந்தது. அதன்படி உலக நாடுகள் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை முடிந்த அளவிற்கு செய்துவரும் நிலையில் பிரித்தானியா நாடு தங்களுடைய நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறுகையில் தற்போது உபரி தடுப்பூசி பிரித்தானியாவில் இல்லை என்பதால் இந்தியாவிற்கு அளிக்கவில்லை என்றும், தங்களிடம் இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து தங்கள் நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பிரித்தானியாவில் பிப்ரவரி மாதம் கூடுதலாக இருக்கும் கொரோனா மருந்தை உதவி தேவைப்படும் நாடுகளுக்கு அளிப்பதாக உறுதி அளித்திருந்தோம், ஆனால் தடுப்பு மருந்து தற்போது நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டியது முக்கியமானதாக உள்ளதால் பிரித்தானியாவில் தற்போது வேக்சின் இல்லை என்றும் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.