ஆன்லைன் மூலம் குடிபெயர்வு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பார்ப்போம்.
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பதாரரின் புகைப்படம்
முகவரிச் சான்று
திருமணச் சான்று/ திருமண அழைப்பிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து Family Migration Certificate என்ற Optionஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.
பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களஒ நன்கு படித்த பின்னர் proceed கொடுக்கவேண்டும்.
தொடர்ந்து CAN register option கிளிக் செய்யவேண்டும். அப்போது நீங்கள் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு உங்களது CAN எண் வரும். அவற்றை உள்ளிட்டு proceed கொடுக்கவேண்டும்.
இதைத்தொடர்ந்து, Nature of Migration பகுதியில் இரண்டு (Single/Family) Option கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் Single என்ற Option-ஐ கிளிக் செய்தால் விண்ணப்பதார் மட்டும் குடிபெயர்கிறார் என்று அர்த்தம். பின்பு Previous Address, Smart Card No, Reason for Seeking Family Migration ஆகிய கட்டங்களை நிரப்ப வேண்டும்.
நீங்கள் குடும்பத்துடன் குடிபெயர்கிறீர்கள் என்றால் Family என்ற Options-ஐ கிளிக் செய்து Previous Address, Family Members Details, Smart Card No, Reason for Seeking Family Migration ஆகிய கட்டங்களை நிரப்ப வேண்டும். பின்னர் Submit பட்டணை கிளிக்செய்யுங்கள். தொடர்ந்து கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.
தொடர்ந்து ஆன்லைன் மூல ரூ.60 கட்டணத்தை செலுத்தவேண்டும். உங்களது ஆவணங்கள் சரிப்பார்க்கப் பட்டு சான்றிதழ் கிடைத்ததும் உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும். அதன்பின்னர் இந்த இணையதளத்தில் உங்களது user id கொண்டு லாகின் செய்வது மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.