Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி…. ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு…. பயணிகள் ஷாக்….!!!!

தொலைதூரக் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை இரண்டாக குறைப்பதற்கு ரயில்வே வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது தொலைதூரக் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 7 சாதாரண படுக்கை வசதி பெட்டிகளும், ஏசி மூன்று டயர் பெட்டிகள் ஆறும், ஏசி இரண்டு டயர் பெட்டிகள் இரண்டும், முன்பதிவில்லா பெட்டிகள் ஐந்தும் இயக்கப்படுகின்றன. இதையடுத்து ரயில்வேயின் புதிய உத்தரவின் படி, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 7-லிருந்து இரண்டாக குறைக்கப்பட்டு ஏசி 3 டயர் பெட்டிகள் 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி 2 டயர் பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்பதிவு இல்லா பெட்டிகள் மூன்றாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் பெட்டி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே ரயில்வே போர்டின் இந்த புதிய உத்தரவால் எக்ஸ்பிரஸ் ரயில்களின் தற்போதுள்ள சாதாரண படுக்கைகளின் எண்ணிக்கை 780- லிருந்து 156 ஆக குறைந்துள்ளது. ரயில்வேயில் இந்த புதிய அறிவிப்பு சாதாரண படுக்கை வசதி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |