Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா…. வடமாநில வாலிபர் இருவர் கைது…. போலீசார் அதிரடி..!!

சேலம் வழியாக தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் வழியாக ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளாவிற்கு தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரயில்வே காவல் துறையினருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் ரயில்வே காவல்துறையினர் அந்த ட்ரெயினில் ஏறி ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆய்வில் சந்தேகம் படும்படியாக இரண்டு வாலிபர்கள் டி.எல். 2- வது பெட்டியில் இருந்தார்கள்.

அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 26 வயதான சரோஜி நாயக், 22 வயதான ஆனந்த் என்பது தெரியவந்தது. அப்போது அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது அதில்6 1/2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த 2 பேரையும் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |