Categories
சினிமா தமிழ் சினிமா

எக்ஸலென்ட் மூவி… மிஸ் பண்ணிராதீங்க… ‘கர்ணன்’ படம் குறித்து பிரபல நடிகர் டுவீட்…!!!

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த  படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .

மேலும் இந்த படம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எக்ஸலெண்ட் மூவி… டோண்ட் மிஸ் இட்.’ என கர்ணன் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |