Categories
உலக செய்திகள்

“ஊழியர்கள் வெளியேறலாம்”…. பெலாரஸில் தூதரக செயல்பாடுகள் நிறுத்த…. பிரபல நாட்டின்உத்தரவால் பரபரப்பு….!!!

மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற ஊழியர்கள்  தாமாக வெளியேறும்படி அமெரிக்கா  அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ஆதரவு நாடான பெலாரஸில் தூதரக செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் குடும்பத்தினரும் வெளியேறலாம் என அமெரிக்கா கூறியுள்ளது. மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படையெடுப்பிற்கு கடுமையான பதிலடியாக ரஷ்யா மத்திய வங்கி பரிவர்த்தனைகளை  அமெரிக்கா துண்டித்துள்ளது.  ரஷ்யாவின் முதலீட்டு நிதியை  தடை செய்துள்ளது. மேலும் அமெரிக்க அரசு அரசியல் நீதி அமைப்புக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தேசிய கூட்டமைப்பின் தேசியவள நிதியம் அல்லது ரஷ்யக் கூட்டமைப்பின் நிதி அமைச்சகம் மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் வங்கி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் போன்றவை தடை செய்யப்பட்டு உள்ளன. மேலும் மேற்கொண்ட எந்த ஒரு பரிவர்தனையும்  எந்த ஒரு அமெரிக்க நபரும்  மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |