Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் பரிசு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்….!!!

தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு மற்றும் போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால் குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் தாவர் கூறியுள்ளார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |