Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊழலுக்கு எதிராக பேச… திமுக- காங்கிரஸுக்கு தகுதி இல்லை… அமித்ஷா பேச்சு…!!!

பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழ்நாட்டுக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தது என திமுகவுக்கு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடந்த பல்வேறு திட்டப்பணிகளை துவக்க விழாவில் பங்கேற்று தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் பேசிய அமித் ஷா, ” திமுக தலைவர்கள் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

அவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் நீங்கள் இருந்த போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என பட்டியலிட தயாரா. ? நான் இன்று சென்னை வந்துள்ளேன். மோடி அரசு தமிழகத்துக்கு செய்த நல திட்டங்களை நான் பட்டியலிட்டு சொல்ல தயாராக உள்ளேன். நீங்கள் தயாரா? திமுகவுக்கு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |