பார்த்திபன் இயக்கி, நடித்து ஒரே ஷாட்டில் எடுத்த “இரவின் நிழல்” படம் திரைக்கு வந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில், இப்போது அந்த படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் சிறிய பழுவேட்டரையராக நடித்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த நிலையில், அடுத்து சிம்புவுடன் தான் கூட்டணி சேர இருப்பதாக அவர் சமீபத்தில் ஒரு பதிவுபோட்டிருந்தார்.
இந்நிலையில் கொச்சியில் இருந்தபடி பார்த்திபன் ஒரு பதிவுபோட்டுள்ளார். அவற்றில் “மெதுவே நகரும் படகுகள் நடுவே நாட்களைப் போலவே கடந்து செல்லும் அந்த கரும் படகு. இன்று கொச்சி, நாளை கோவை, நாளை மறுநாள் காங்கேயம் என ஊர் ஊராய் ஊர்ந்து செல்கிறேன். ஊற்றெடுக்கும் கற்பனைகளிலிருந்து தேர்ந்தெடுக்கும் ஒரு படைப்பு விரைவில்” என பார்த்திபன் பதிவிட்டிருக்கிறார். தான் விரைவில் அடுத்த திரைப்படத்தை அறிவிக்கப் போவதை இப்படி அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.