Categories
சினிமா தமிழ் சினிமா

ஊர்வசி ரவுத்தாலாவுக்கு இவ்வளவு சம்பளமா….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…. வெளியான தகவல்….!!!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகின்றார். தெலுங்கு, மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். ஏற்கனவே ஆறு கோடி வரை வாங்கியவர் தற்போது பத்து கோடி கேட்பதாக கூறப்படுகின்றது. தென்னிந்திய நடிகைகள் யாரும் நயன்தாரா சம்பளத்தை நெருங்கவில்லை. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தாலா சமீபத்தில் திரைக்கு வந்த தீ ஜெலன்ட்  எனும் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக 20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைத்தளங்களில்  தகவல்கள் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகையான  நயன்தாராவே இவ்வளவு சம்பளம் பெறாத நிலையில் ஊர்வசி ரவுத்தாலாவுக்கு  20 கோடி சம்பளம் வழங்கப்பட்டது உண்மையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை ஊர்வசி ராவுத்தாலா தரப்பில் மறுத்து இருக்கின்றனர். ரூ.20 கோடி ஊர்வசி ரவுத்தாலா  வாங்கவில்லை எனவும் ஒரு அறிமுக நடிகைக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ அதைவிட அதிகமாக பெற்றுள்ளார் எனவும் ரவுத்தாலா தரப்பில் இருந்து விளக்கம் அளித்து இருக்கின்றனர்.

Categories

Tech |