சென்னையிலிருந்து விமானம் வாயிலாக நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் மதுரைக்கு வந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது “தேவர் தங்க கவசம் விவகாரமானது நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் நீதிமன்ற தீர்ப்புக்கு நான் கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றி சில பேர் நீதிமன்றத்துக்கு போக இருப்தாக தெரிகிறது. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்..? என மக்களுக்கு தெரியும்.
பாவத்தை அவர்கள் செய்து விட்டு பழியை என் மீது போடுகின்றனர். அ.தி.மு.க உறுதியாக இணையவேண்டும் என்பதே என் நோக்கம். அ.தி.மு.க தொண்டர்கள் இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகத் தான் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினார். புரட்சித்தலைவி அம்மா பல்வேறு தியாகங்களை செய்து இந்த இயக்கத்தை வழிநடத்தி இருக்கிறார். தன்னைப் பற்றி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும், தொண்டர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். சரியான நேரத்தில் அவர்களை அணுகுவேன் என தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.
முன்பாக சட்டசபையில் எதிர்க் கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர்கோட்டம் அருகில் அ.தி.மு.க தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சென்றனர். அப்போது காவல்துறையினர் அனுமதி வழங்காததால் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதன்பின் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வரின் ஆணைக்கிணங்க ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி ஆகும். ஓபிஎஸ்-ஐ பி டீமாக பயன்படுத்தி அதிமுக-வை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் அரைமணிநேரம் சந்தித்துப் பேசினர் என்று குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.