இன்ஜினியர் வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் அடுத்த மணப்பாக்கம் எம்.ஜி.நகரைச் சேர்ந்தவர் கவுரி சங்கர் . இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக அவரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்தர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த போது அவரது வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்க பட்டிருந்த 18 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து போனது தெரியவந்துள்ளது. இது பற்றி நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.