காட்டுயானைகள் கோவிலுக்குள் புகுந்து இரும்பு கேட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, மான், காட்டு யானைகள் என பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் இருந்து சில காட்டுயானைகள் தண்ணீர் தேடி மருதமலை அடிவாரத்தில் அடிக்கடி வருவதாக அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தடாகம் பகுதியில் இருந்து காட்டுயானைகள் மருதமலை மலைப்பகுதி வழியாக தான்தோன்றி விநாயகர் கோவில் அருகே வந்துள்ளது. இதனையடுத்து அந்த யானைகள் கோவிலின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்து கோவிலை சேதப்படுத்தியுள்ளது. இதன்பிறகு காட்டுயானைகள் மடுவு பகுதி வழியாக சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.