ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆளக்கரை பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் இருந்து 3 கரடிகள் வெளியே வந்து சுற்றி திரிகிறது. இந்நிலையில் அந்த கரடிகள் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியின் சுவர் மீது ஏரி சமையலறையின் வெளிப்புறத்தில் கொட்டப்பட்டிருந்த உணவு கழிவுகளை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளது .
இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை காணும் அப்பகுதி மக்கள் கரடியை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.