கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்கு உரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமரியாதை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “தெற்கு திட்ட ஊராட்சி மன்ற தலைவர் அவம் அறிவிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. திமுக கட்சியில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர்ந்திருக்கும் அந்த புகைப்படம் நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள தலைகுனிவு. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.