தமிழகத்தில் நாளை (24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக நேற்றும், இன்றும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு 9 மணி வரையிலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு காலத்தில் தோட்டக்கலைத் துறை உதவியுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மக்களுக்கு காய்கறிகள் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.