நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் வரை நேரடி விமான சேவை தொடங்கி உள்ளது. இந்த நேரடி விமான சேவையின் மூலம் பயண நேரம் சுமார் 3 மணி நேரம் குறைந்துள்ளது. பாரிஸ் முதல் சென்னை வரையிலான விமான சேவையை வழங்கும் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் முதல் விமானம் இன்று அதிகாலை 12.28 மணிக்கு 111 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.