Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு… எதற்கெல்லாம் தடை…?

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் இந்த ஊரடங்கு முதல்வர் அறிவித்தார். பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கொரோனாவை தடுக்க வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடரும்.

நோய் கட்டுப்பாடு பகுதிகளில் எந்தத் தொடர்பும் கிடையாது. கொரோனா பரவலை பொறுத்து மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்ளலாம். சர்வதேச விமான சேவைக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பல்வேறு அறிவிப்புகள் இந்த ஊரடங்கில் இடம்பெற்றுள்ளன.

Categories

Tech |