Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு எதிரொலி: Airtel தடாலடி அறிவிப்பு..

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பலருக்கு வருமானம் குறைந்து இருப்பதால் ஏர்டெல் நிறுவனம் ரூ.49 ரீசார்ஜ் பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் ரூ.38 டாக் டைம், 100 எம்பி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.70க்கு ரீச்சார்ஜ் செய்பவர்களுக்கு ரூ.129 டாக் டைம் மற்றும் 200 எம்பி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |