நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில் வரியை கால அவகாசம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணங்களை அரசு விரைவாக வழங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.