Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவு – நாடு முழுவதும் 75 லட்சம் பேருக்கு இலவச உணவு…மத்திய அரசு

ஊரடங்கு உத்தரவை ஓட்டி நாடு முழுவதும் 19 ஆயிரத்து 460 சிறப்பு முகாம்களில் 75 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு உணவு, தங்குமிடம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதுபோல் ஆதரவற்ற சாலையோர வாசிகள் மற்றும் ஏழை மக்களும் இந்த ஊரடங்கு உத்தரவால் பட்டினிக்கு ஆளாகினர்.

ஆகவே நாடு முழுவதும் இருக்கக்கூடிய வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 19 ஆயிரத்து 460 சிறப்பு முகாம்களில் 75 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் தங்குவதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்த 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் 27 ஆயிரத்து 661 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |