ஊரடங்கில் ப்ரீபெய்ட் ஆட்டோ சேவைகள் தொடக்கம்.சென்னை பெருநகர காவல்துறை அதிகாரி,ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தினரூடன் கலந்து பேசி அனுமதி.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநாள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ரயில் சேவைகள் ஊரடங்கு சமயங்களில் முழுவதுமாக இயக்கப்படுவதால்சென்னை எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் ரயில் மூலம் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் டாக்சி மற்றும் ஆட்டோக்கள் கிடைப்பதில் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் அதிக கட்டணம் செலுத்தி அவதிக்கு உள்ளாவதாகவும் தகவல்கள் கிடைத்தன.
இதை அறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சி.சரத்கர், தலைமையில்,மேலும் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கங்களுடன் கலந்தாய்வு செய்து சில ஏற்பாடுகளை செய்துள்ளார். இதில்முன்னர் ஊரடங்கு சமயத்தில் எலும்பூர் ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்தது. தற்போது ரயில்வே அதிகாரிகள் 10 ப்ரீபெய்டு ஆட்டோ சேவை செயல்பட அனுமதி வழங்கியுள்ளனர்.சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துழைப்பார்கள்.அதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ப்ரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படலாம் எனவும்,அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்டோ டாக்சி சங்கங்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளை இறக்கி விட்டு வாகனங்கள் வெறுமையாக திரும்பும்போது போலீசார் வாகனத்தை நிறுத்தி அவர்களை சிறை பிடிப்பதாக சங்கங்கள் புகார் கூறியுள்ளது.மேலும் காவல்துறையினர் சோதனையின்போது வாகன ஓட்டுனர்கள் பயணிகளின் ரயில் டிக்கட்டுகளின் பிரதியை தங்களது கைபேசியில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறைக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேற்கூறிய அனைத்து சங்கத்தினருக்கும் அளிக்கப்பட்டு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.