நடிகர் ஜெய் தனக்குள் இருந்த இசைக்கலைஞனை வெளிக்கொண்டுவந்த ஊரடங்குக்கு நன்றி கூறியிருக்கிறார் .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஷிவ ஷிவா’ . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சரத், சத்ரு, பாலசரவணன், அருள்தாஸ், காளி வெங்கட், ஜேபி, முத்துக்குமார், இயக்குனர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் . இந்த படத்திற்காக ஜெய் தனது உடலமைப்பை மாற்றி நடித்துள்ளார் .
மேலும் இதுகுறித்து நடிகர் ஜெய் ‘ கமல் சார் ‘மருதநாயகம்’ படத்திற்காக உடல் அமைப்பை மாற்றியது போல் நான் என் உடல் அமைப்பை மாற்றவில்லை. ஒல்லியாக தெரிய கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றினேன் . நான் என் சிறு வயதில் அதிக நாட்கள் செலவிட்டது ஒலிப்பதிவு கூடத்தில் தான் . ‘அண்ணாமலை’ மற்றும் ‘பாட்ஷா’ படங்களின் ஒலிப்பதிவின் போது நான் அங்கு இருந்திருக்கிறேன் . எனக்கு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பது தான் கனவு . எனக்குள் இருந்த இசைக்கலைஞனை வெளிக்கொண்டுவந்த ஊரடங்குக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார் .