சென்னையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்து கொண்ட பொறியியல் பட்டதாரிகள் அதனை யூடியூப்பில் நேரலை செய்து உறவினர்களின் வாழ்த்துக்களை பெற்றனர்.
கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று முகூர்த்த நாள் என்பதால் ஏற்கனவே கோவில்களில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தவர்கள் கோவில் வாசல்களிளே திருமணம் செய்து கொண்டனர்.
இந்த சூழலை சாமர்த்தியமாக கையாண்ட பொறியியல் பட்டதாரிகள் யுகேந்திரன், காயத்ரி கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். 30 பேர் மட்டுமே பங்கேற்ற திருமண விழாவை உறவினர்கள் காணவேண்டும் என்பதற்காக யூடியூப்பில் நேரலை செய்து அசத்தியுள்ளனர்.