தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருவதையொட்டி அதிக அளவில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை திமுகவினர் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவினர் திமுக ஆட்சியின் அறிவிப்புகள் மிகவும் நகைச்சுவையாக இருப்பதாக
கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
அதாவது குரல்களை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் பள்ளிகள், மதுக் கடைகள் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆலயங்களில் கட்டுப்பாடு அமலில் உள்ளது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள் திறந்து இருக்கும். ஆனால் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குழப்பங்களுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்புபட்டிருப்பதாக திமுக ஆட்சி குறித்து அதிமுகவினர் விமர்சித்துள்ளனர்.
மேலும் பள்ளிகள் திறந்திருப்பதினால், ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரவிக்கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நிபா வைரஸ் பரவல் குறித்த அச்சம் நீட்டித்து வருகிறது. இதற்கிடையில் திமுக அரசின் அறிவிப்புகள் நகைசுவையாகவே இருக்கின்றன குற்றம் சாட்டியுள்ளனர்.விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் வைத்துக் கொண்டாட வேண்டும் என்று அரசு உறுதியாக உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளனர்.