தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வட்டார பால் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு மாடு வளர்க்கும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை யூனியனில் வைத்து தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 47 கிராமங்களில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களில் மாடுகள் வளர்த்து வரும் பெண்களை உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து வட்டார அளவிலான பால் உற்பத்தியாளர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு கன்று வளர்ப்பு, மாடு வளர்ப்பு, மாடு வளர்ப்பின் மூலம் குறைந்த செலவில் அதிக வாருவாய் ஈட்டுவது, தீவன உற்பத்தி முறைகள் குறித்து 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து குழு உறுப்பினர்களை காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று தரமான பால் கண்டுபிடித்தல், சத்துக்கள் கண்டறிதல், பால் குளிரூட்டும் முறை, பால், நெய், வெண்ணெய், தயிர், பால் மதிப்பு கூட்டுதல் போன்ற விவரங்களையும் கூறியுள்ளனர்.
இந்த பயிற்ச்சியை மாவட்ட செயல் அலுவலர் சதீஷ்குமார் தொடங்கி வைத்துள்ளார். மேலும் ராமநாதபுரம் கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் விஜயலிங்கம், உதவி பேராசிரியர் ராஜேஷ், செயல் அலுவலர்கள் ராஜபாண்டி, பரமசிவம், மார்ட்டின் விண்ணரசு ஆகியோர் பயிற்சி அளித்துள்ளனர். இதனைதொடர்ந்து பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.