Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம்…..!!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் கிராமங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்கு சேகரித்தார். அப்போது மூதாட்டி ஒருவர் உற்சாகமாக  நடனமாடி அமைச்சரை  வரவேற்றார். அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அடுத்த  சமுத்திரம் கிராமத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார். காவனூர் பகுதியில் சென்றபோது அடிப்படை வசதிகளை செய்யவில்லை என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் கட்டணாச்சம்பட்டியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காந்தியவாதி ரமேஷ் பேசியது, எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று கூறினார். அதன்பிறகு திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுகவின் சாவித்திரி வாக்காளர்களின் கால்களில் விழுந்து ஆதரவைப் பெற்றார். அதனைப்போலவே கோட்டாட்சியர் ஊராட்சி ஒன்றியத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

மேலும் தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. சென்னையிலிருந்து ஊராட்சி தலைவர் பதவிக்கு கூடுதலாக 1,61,000 சீட்டுகள் சீல் வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. அவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் வாக்குப்பதிவு அன்று பூத் சிலிப் இல்லையெனில் வாக்காளரை திருப்பி அனுப்பாமல் வாக்காளர் அட்டையை சோதித்து பின்னர் வாக்களிக்க அனுமதிக்கலாம். அதுமட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு 14 மாற்று ஆவணங்களிலிருந்து ஒன்றை வைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |