Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித்தேர்தல்: அதிக வாக்குப்பதிவு பெற்ற மாவட்டம் எது…?

புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது, இந்த தேர்தலைப் பொருத்தவரை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே சிறுசிறு வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பான்மையான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குபதிவு நிலவரத்தின் படி 9 மாவட்டங்களில் 74.37 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.36% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை – 81%, காஞ்சிபுரம்- 80%, திருப்பத்தூர் 78%, தென்காசி 74%, கள்ளக்குறிச்சி 72%, நெல்லையில் 69 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக செங்கல்பட்டு, வேலூரில் தலா 67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |