Categories
மாநில செய்திகள்

ஊதியம் கொடுக்க முடியாது…. ஊழியர்களுக்கு எச்சரிக்கை…. அரசு துறைகள் அதிரடி….!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை மையமாக வைத்து மார்ச் 28 மற்றும் 29 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சார வாரியம் மின்வாரிய ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது மின்வாரிய ஊழியர்கள் யாரேனும் இந்த போராட்டத்தில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் பங்கேற்றால் அன்றைய தினத்திற்கான ஊதியம் வழங்கப்படாது என்று எச்சரித்துள்ளது. இதே போன்று போக்குவரத்து துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது 28 மற்றும் 29 தேதிகளில் போக்குவரத்து கழக ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டால் அது பொதுமக்களுக்கு  இடையூறை ஏற்படுத்தும் செயலாக கருதப்படும். எனவே அன்று ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. மேலும் அன்றைய தினங்களை விடுமுறை எடுக்கவும் அனுமதி இல்லை என்று  போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

 

Categories

Tech |