அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோரா இருவரும் ஊட்டி விட்டு ரொமான்டிக் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூரும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் சென்ற சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். 48 வயதாகும் நடிகை மலைக்கா அரோராவுக்கு விவகாரத்து ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறார் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அர்ஜுன் தனது 37 ஆவது பிறந்தநாளை காதலியுடன் சேர்ந்து பாரிஸுக்கு சென்று கொண்டாடியுள்ளார். அங்கே இருக்கும் ஹோட்டலில் இருவரும் பர்கர், பிரெஞ்சு ப்ரைஸ், கேக் என மாறி மாறி ஊட்டி கொண்டுள்ளனர். மேலும் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை மலைக்கா தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அர்ஜுன் கபூரைவிட மலைக்கா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.